untitled
யாழ்வாணன்
சிறுகதைகள்

 

யாழ்வாணன்....... 'ஆயிரத்தில் ஒருவர்'


அவரது உழைப்பும் உறுதியும் சகிப்புத்தன்மையும்,பொறுமையும்,பாசமும் ..என் உதிரத்தில் கலந்திருந்து, என்னை உதிர்ந்து போகாமல் காப்பாற்றுகின்றன......உயர வைத்துக் கொண்டிருக்கின்றன.
                                                     - யாழ் சுதாகர் .

எனது நண்பன்                             - சுரதா யாழ்வாணன்

நான் தனியன்                              - சுரேஷ் யாழ்வாணன்

யாழ்வாணன், எனது கண்கள், உமது பார்வை, எல்லாம் வெல்லலாம்....
                                                     - கண்ணதாசன் யாழ்வாணன்

ஈழத்து இல்க்கிய உலகில் "யாழ்வாணன்" என்ற பெயர் நன்கு புகழ் பெற்றது. நகர மண்டபக் காப்பாளராக அவா கடமையாற்றும் யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில்கூட நா.சண்முகநாதனிலும் பார்க்க யாழ்வாணனே முக்கியமானவர்.

யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாள்ராகப் பணிபுரிந்து வருகிறார். யாழ் இலக்கிய வட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களுள் அவரது அயராத அடக்கமான உழைப்பு மிகவும் முக்கியமானதொன்று.

யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட 'சுகாதார ஒலி' என்ற பத்திரிகையின் ஆசிரியர். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகக் கடமையற்றியதுடன் 'எழில்மிகு யாழ்ப்பாண்ம்' என்ற வாடா மலரையும் வெளியிட்டு அறிஞர் பெருமக்களின் பாராட்டுதல்களையும் அவர் பெற்றுள்ளார்.

'அண்ணா அஞ்சலி' அவரது மற்றுமோர் தொகுப்பு நூலாகும். கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இலக்கிய விழாக்கள், நாடக - நடன விழாக்கள், பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றை செம்மையாக ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்தி முடிக்கும் யாழ்வாணனின் 'மந்திர சக்தி'யையும் பலர் அறிவர். சிற்ந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்ற எழுத்தாளர். பரந்த சமூக சேவையாளரான யாழ்வாணன் நிறைந்த நல்லியல்புகளைக் கொண்ட பண்பாளர். அவர் ஆயிரத்தில் ஒருவர்.
         - கவிஞர் வி.கந்தவனம்

...
Home   |  Library | Comments
- Kannadasan Yazhvanan 2007 All rights reserved.

Report Content · · Web Hosting · Blog · Guestbooks · Message Forums · Mailing Lists
Easiest Website Builder ever! · Build your own toolbar · Free Talking Character · Email Marketing
powered by a free webtools company bravenet.com